Search This Website

Loading...
News Update :
தமிழில் வெளிவரும் தொழில் பத்திரிக்கைகளுக்கும் தொழில் உலகம் . காம் இணையத்தளத்திட்கும் எவ்வித தொடர்பும் இல்லை. விளம்பரம் மற்றும் எவ்வித தொடர்புகளுக்கும் கீழ்கண்ட E - Mail லில் அல்லது போனில்மட்டுமே தொடர்பு கொள்ளவும்.
E-Mail; tholilulagam@gmail.com
08220506646

தொழில் பயிற்சி

வெப் டிசைனிங், வெப் ஹோஸ்டிங், SEO , பிளாக் சப்மிசன், பிளாக் துவங்க, மற்றும் 100 க்கும் மேற்பட்ட ஆன்லைன் தொழில்கள் பற்றி அறிந்து பயிற்ச்சி பெற ஆன்லைனில் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க
தினமும் பயிற்சியளிக்கப்படுகிறது, பயிற்சி பெற்று ஆன்லைனில் சம்பாதிக்க உடனே அணுகவும்.
Er செல்வம் / ANGEL OUTSOURCING.
செல்: 08220506646 ஈரோடு.

கட்டணம் Rs. 2500 முதல் Rs.5000/- வரை மட்டுமே

தொழில் ஆலோசனை

சுய தொழில் தொடங்க,
தொழிலை மேம்படுத்த,
மெசினரிகள் வாங்க,
தொழில் சம்பந்தப்பட்ட லோன்கள்,
மார்க்கட்டிங் தொடர்பான சந்தேகங்கள் போன்ற அனைத்திற்கும் கட்டண ஆலோசனை பெற்றுக்கொள்ள தொடர்பு கொள்க:

Er செல்வம் / ANGEL OUTSOURCING.
செல்: 08220506646 ஈரோடு.

முகவர் வாய்ப்பு

தமிழகம் முழுவதும் பிரபல நிறுவனத்தின் டயரை விற்பனை செய்ய ஏரியா வாரியாக டீலர்கள் மற்றும் டிஸ்டிபூட்டர்கள் தேவை. தொடர்புக்கு: மார்க்கெட்டிங் மேனேஜர்: திரு. கோபாலக்ருஷ்ணன் நிறுவன பெயர்: BRAZA TYRES செல்:0 - 9590179949

புதிய தொழில்களை உருவாக்குங்கள்! எளிதாய் வெற்றி பெறுங்கள்!

Wednesday, 12 March 2014

நம்மில் பலருக்கு வாழ்க்கையில் முதல்முறையாக தொழில் தொடங்கி ஜெயிக்க ஆசை. இன்னும் சிலர், ஏற்கெனவே ஒரு தொழிலை வெற்றிகரமாக செய்துகொண்டு இருப்பார்கள். ஆனாலும், அதிக லாபம் தரக்கூடிய புதிய தொழில் ஏதேனும் தொடங்க வாய்ப்பு கிடைத்தால் அதையும் ஒரு கை பார்த்துவிடத் துடிப்பார்கள். இந்த இரண்டு வகையினருக்கும், அதிக ரிஸ்க் இருந்தாலும் அதிக லாபம் தரக்கூடிய புதிய பொருளாதாரத் தொழில்கள் ஏற்றவை. அது என்ன புதிய பொருளாதாரத் தொழில்கள் என்று கேட்கிறீர்களா..? 1990-ல் நம் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டபோது பல துறைகளிலும் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைத்தன. தொலைபேசித் துறையில் பார்தி ஏர்டெல், ஐ.டி. துறையில் இன்ஃபோசிஸ், விப்ரோ, வங்கித் துறையில் ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி., யெஸ் பேங்க், மருந்துத் துறையில் பயோகான், டாக்டர் ரெட்டீஸ் என பல நிறுவனங்கள் உருவாகி, இந்தியாவின் புதிய தொழில் முகத்தை உலகுக்கு காட்டியது. கன்ஸ்யூமர் துறையில் ஐ.டி.சி., கவின்கேர், மாரிகோ என பல நிறுவனங்கள் உருவாகி, இன்றும் சக்கைப்போடு போட்டு வருகின்றன.

இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்தப் பொருளாதார மாற்றங்களினால் இன்றும் புதிது புதிதாக பல தொழில் வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இவற்றில், இன்டர்நெட், மொபைல் டெக்னாலஜி, டெலிகாம் போன்ற துறைகளில் உருவாகிவரும் வாய்ப்புகளை புதிய பொருளாதாரத் தொழில்களாக நாம் கருதலாம்.

உதாரணத்திற்கு, உணவகங்கள் (ரெஸ்டாரன்ட்ஸ்) முன்பெல்லாம் ஒரு வகைதான். ஆனால், இன்றோ துரித உணவகம், தோசை ஹட், பிட்ஸா ஹட், சைனீஸ், அமெரிக்கன், இத்தாலியன், அரேபிக் என்று பல வகை - ஒவ்வொருநாளும் பெருகிக்கொண்டே போகின்றன.

கம்ப்யூட்டர் டெக்னாலஜியில் ஒரு சின்ன அப்ளிகேஷனை கஷ்டப்பட்டு உருவாக்கி, அதனைப் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதைச் சொல்லி பிரபலப்படுத்துகிறார்கள். அது ஓரளவுக்கு பிரபலமாகி, பலரும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், பல நூறு கோடி ரூபாய்க்கு அந்த சாஃப்ட்வேரை விற்றுவிட்டு, சென்றுவிடுகிறார்கள்.

இவை மட்டுமல்ல, இன்னும் பல புதிய தொழில் வாய்ப்புகளைச் சொல்லலாம். உதாரணமாக, கால் டாக்ஸி ஏற்கெனவே இருக்கிறது. இப்போது கால் டாக்ஸிக்குப் பதிலாக கால் ஆட்டோவும் வந்துவிட்டது! வாடகைக்கு சைக்கிள் விட்டோம் முன்பு. இனி வாடகைக்கு கார்/பைக் விட்டால் எப்படி இருக்கும்?

நாம் எல்லோரும் கடைகள் வைத்து ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் சேவை செய்கிறோம். ஆன்லைன் கடை வைத்து உலகம் முழுவதும் தொழில் செய்தால் எப்படி இருக்கும்? டாக்டர்களை பல வியாதிகளுக்கும் நேரிலேயே சென்று பார்த்து உரிய கட்டணத்தைச் செலுத்திவிட்டு வருகிறோம். போன் அல்லது இ-மெயில் மூலம் டாக்டர் கன்சல்டிங் செய்தால் எப்படி இருக்கும்? மருந்துக் கடைகளுக்குச் சென்று மருந்து வாங்கி வருகிறோம். ஆன்லைன் அல்லது போன் மூலம் மருந்து விற்பனை செய்தால்?

இதுபோல் இன்றைய இளம் தலைமுறையினருக்கு என்னென்ன தேவை என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். புதிய ஒயினை புதிய கோப்பையில் தர முடியுமா என்று பாருங்கள். அல்லது பழைய ஒயினை புதிய கோப்பையில் தரமுடியுமா என்று யோசியுங்கள்.

அமெரிக்காவிற்கும் பிற நாடுகளுக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம், அமெரிக்கர்கள் குறைந்த மார்ஜின் உள்ள பிசினஸைத் தூக்கி எறிந்து கொண்டே இருப்பார்கள். அதேசமயம், புதிய ஹை மார்ஜின் தொழில்கள் உலையில் வெந்துகொண்டே இருக்கும். இதுவே அந்நாட்டை எப்போதும் உலகளவில் தலைமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதுமாதிரியான தொழில்களைத் தேர்வு செய்யும்போது நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அனுபவம் இல்லாத புதிய தொழில், ஜெயிக்கும் என்கிற நம்பிக்கை பலருக்கும் இருக்காது என்பதால் முதலீடு கிடைப்பது கடினம், அரசின் சட்டதிட்டங்கள் திடீர் பாதகங்களை உருவாக்கலாம்... என நெகட்டிவ் அம்சங்கள் இத்தொழிலில் இருந்தாலும், பாசிட்டிவ் விஷயங்களும் நிறைய இருக்கவே செய்கின்றன.

புதிய தொழில்கள் மூலம் நம் நாட்டில் தோண்டி எடுக்கவேண்டிய பணம் இன்னும் ஏராளமாக உள்ளது. அதைத் தோண்டுபவராக ஏன் நீங்கள் இருக்கக் கூடாது? அப்படி நீங்கள் தோண்ட நினைத்தால், ஹை மார்ஜின் பிசினஸாக யோசியுங்கள். உங்கள் சிந்தனைக் குதிரையைத் தட்டிவிடுங்கள். வெளியில் சென்று உங்கள் எண்ணங்களை உங்களுக்கு நம்பகமானவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். பிசினஸ் ப்ளானை பட்டை தீட்டுங்கள்! தொடர்ந்து பாடுபடுங்கள். உங்கள் உழைப்பு இன்னும் சில ஆண்டுகளில் பல நூறு கோடி ரூபாயைச் சம்பாதித்துத் தரும் என்பதற்கு மூன்று நிஜ உதாரணங்களை இனி சொல்கிறேன்.

ரெட்பஸ்:

2006-ல் www.redbus.in என்ற வெப்சைட் பனிந்த்ர சமா மற்றும் இரண்டு நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் மூவரும் பிட்ஸ் பிலானியில் படித்தவர்கள். தீபாவளியின்போது தாங்கள் வேலை பார்த்த இடமான பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்தில் இருக்கும் வீட்டிற்கு பஸ்ஸுக்கு டிக்கெட் கிடைக்காமல் தவித்தபோது உருவான ஐடியாதான் ரெட்பஸ்.இன்

இந்த வெப்சைட் மூலம் இந்தியாவில் அனைத்து இடங்களிலிருந்தும் தொலைதூர பஸ்ஸிற்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம். சமீபத்தில் இந்த நிறுவனத்தினை தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நேஸ்ப்பர்ஸ் என்ற நிறுவனத்தின் இந்திய அங்கமான இபிபோ ரூ.500-600 கோடிக்கு வாங்கியுள்ளது.  மூன்று பேர் ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்து உழைத்ததற்கு கிடைத்தப் பரிசுதானே இது!

ஜஸ்ட்டயல்:

ஒரு தொழிலின் டெலிபோன் எண் அல்லது முகவரியை அறிந்துகொள்ள ஜஸ்ட்டயல் என்ற நிறுவனத்தின் சேவையை உங்களில் பலர் பயன்படுத்தி இருப்பீர்கள். இத்தொழிலை ஆரம்பித்தவர் மும்பையைச் சேர்ந்த வி.எஸ்.எஸ். மணி. இதற்குமுன் பல தொழில்களில் தனது கையை நனைத்தார். ஆனால், இத்தொழில்தான் அவருக்கு பெரும் வெற்றியைக் கொடுத்தது. வெறும் ரூ.50,000-த்தைக்கொண்டு 1996-ல் தனது 29-வது வயதில் ஜஸ்ட்டயலை ஆரம்பித்தார். ஓரிரு மாதங்களுக்கு முன்பு வந்த ஐ.பி.ஓ-வில் பல நூறு கோடிக்கு அதிபதியாக மாறியிருக்கிறார்.

மேக்மைடிரிப்:

தீப் கார்லா மேக்மைடிரிப் என்ற ஆன்லைன் டிராவல் வெப்சைட்டை 2000-த்தில் புதுடெல்லியில் ஆரம்பித்து 2010-ல் அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் வெற்றிகரமாக லிஸ்ட் செய்தார். ஒரு பங்கு அமெரிக்க டாலர் 14 என விற்று 70 மில்லியன் டாலர்களை நிறுவனம் திரட்டியது. கூடிய சீக்கிரம் இந்திய சந்தையில் இவரது நிறுவனத்தின் பங்கு பட்டியலிடப்பட்டாலும் ஆச்சரியமில்லை.

இதுமாதிரி நீங்களும் ஏன் ஒரு புதிய தொழிலைத் தொடங்கக்கூடாது?

ஆயில் மில் - சுயதொழில்

Friday, 7 March 2014

வறுவல், பொரியல் என எண்ணெய்யில் செய்யும் உணவு அயிட்டங்கள் அனைத்திற்கும் நம்மவர்கள் அடிமை. நம்முடைய தினசரி சமையலில் எண்ணெய் கலக்காத உணவு என்று எதுவுமில்லை. தோசையில் ஆரம்பித்து பூரி, சப்பாத்தி வரை அனைத்தையும் ஏதாவது ஒரு எண்ணெய்யில் செய்து சாப்பிட்டால் மட்டுமே நம்மவர்களுக்கு திருப்தி. தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில் என பலவகையான எண்ணெய் அயிட்டங்கள் நம்மூரில் இருக்கிறது. நிலக் கடலை, சோயா பீன்ஸ், தேங்காய், எள் போன்ற மூலப் பொருட்களிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.சந்தை வாய்ப்பு!


உணவுப் பொருட்களுக்கான தேவை இருக்கும் வரை எண்ணெய்க்கான தேவையும் இருக்கும். வீடுகள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்களில் எண்ணெய் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பிரியாணி, பஜ்ஜி, வடைகள், நான்-வெஜ் அயிட்டங்கள் தயார் செய்வதற்கு அதிக அளவில் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தவிர, ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு குறைந்தது மூன்று லிட்டர் எண்ணெய் தேவைப்படுகிறது. தேசிய அளவில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி என்பது எந்த சூழ்நிலையிலும் சரிந்து போகாத தொழில். தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் தேங்காய் எண்ணெய் தேவை பெரிய அளவில் உள்ளதால், என்றுமே இதன் மார்க்கெட் களைகட்டியிருக்கும்.


  

முதலீடு!

எண்ணெய் உற்பத்தி செய்யத் தேவைப்படும் முக்கியமான முதலீடு என்றால் கட்டடமும், இயந்திரமும்தான். ஆண்டுக்கு 12,000 லிட்டர் எண்ணெய் உற்பத்தி செய்யும் மில் ஒன்றைத் தொடங்க சுமார் 15 லட்ச ரூபாய் தேவைப்படும். இந்த தொழிலைத் தொடங்கும் நிறுவனர் 15%, மீதமுள்ள 85% கடன் மற்றும் மானியம் மூலம் பெற்றுக் கொண்டு தொழிலைத் தொடங்கலாம்.

கட்டடம்!

ஆயில் மில் தொடங்க குறைந்தபட்சம் 30 சென்ட், அதிகபட்சமாக ஒரு ஏக்கர் வரை இடம் தேவைப்படும். தேவையான இடம் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ எடுத்துக் கொள்ளலாம். எண்ணெய் உற்பத்திக்குத் தகுந்தாற்போல் கட்டடங்களை அமைப்பது அவசியம்.

வேலையாட்கள்!

இத்தொழிலில் வேலையாட் களின் பங்கு மிகவும் அவசியம். ஒரு நாளைக்கு 32 லிட்டர் உற்பத்தி செய்வதற்கு திறமையான வேலையாள் ஒருவர், ஒரு சூப்பர்வைஸர் என இரண்டு நபர்கள் தேவை.
 


மூலப் பொருட்கள்!

நிலக் கடலை, எள், தேங்காய், சோயா பீன்ஸ் போன்ற பொருட்கள்தான் முக்கிய மூலப் பொருட்கள். இதில் எது உங்களுக்கு சுலபமாகக் கிடைக்குமோ அதைக் கொண்டு எண்ணெய் உற்பத்தி செய்யலாம். சில இடங்களில் மேற்சொன்ன எல்லா மூலப் பொருட்களும் எளிதாகக் கிடைக்கும்பட்சத்தில், எல்லாவிதமான எண்ணெய்களையும் உற்பத்தி செய்யலாம். ஆனால், ஒவ்வொன்றுக்கும் தனித் தனி இயந்திரங்கள் தேவைப்படும். காரணம், ஒரு இயந்திரத்தில் ஒரு வகையான எண்ணெய் மட்டுமே தயார் செய்ய முடியும். தேங்காய் கிடைக்கும்போது தேங்காய் எண்ணெய், எள் கிடைக்கும் போது நல்லெண்ணெய் என மாதத்திற்கு ஒரு எண்ணெய்யை நம்மால் தயார் செய்ய முடியாது. இங்கு நாம் தேங்காய் எண்ணெய் தயாரிப்பு மட்டுமே பார்க்க இருக்கிறோம்.தேங்காய் எண்ணெய் தயார் செய்ய தேங்காய்தான் முக்கிய மூலப் பொருள். நூறு கிலோ தேங்காய் பருப்பிலிருந்து 63 கிலோ எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும்.

இயந்திரம்!

எக்ஸ்பெல்லர், வடிகட்டும் இயந்திரம், பாய்லர், அளவிடும் இயந்திரங்கள் என மொத்தம் 90,000 ரூபாய் வரை இயந்திரத்திற்குச் செலவாகும். பெரும்பாலும் இந்த இயந்திரங்கள் அனைத்தும் தமிழகத்திலேயே கிடைக்கிறது.


 

தயாரிப்பு முறை!

தேங்காய் பருப்பு தனியாகவும் கிடைக்கும், அல்லது தேங்காயிலிருந்தும் பருப்பை நாமே எடுத்து கொள்ளலாம். இப்படி தனியே எடுத்த தேங்காய் பருப்பில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பதால் எண்ணெய் எடுப்பது கடினம். எனவே அதை பாய்லர் வெப்பத்தின் மூலம் ஈரத்தை உறிஞ்சி, உலர வைக்கிறார்கள். பின்னர் கட்டர் இயந்திரத்தின் மூலம் தேங்காயைத் துண்டு துண்டாக்கி கிரஷிங் மெஷினில் போட்டு அரைக்கிறார்கள். இதிலிருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கப்பட்டவுடன் அதன் சக்கைகள் வெளியே தள்ளப்படுகிறது. இந்த தேங்காய் எண்ணெய் இதன்பிறகு ஃபில்டர் இயந்திரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கசடுகள் வடிகட்டப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், ஆயில் ஃபில்லிங்’ இயந்திரம் மூலம் பாக்கெட்டுகளிலும், சிறிய டின்களிலும் அடைக்கப்பட்டு விற்பனைக்கு செல்கிறது.

பிளஸ்!


தேங்காய் எண்ணெய் முக்கியமான சமையல் எண்ணெய் என்பதால், எளிதில் சந்தைப்படுத்த முடியும். தலை முடியில் தேய்த்துக் கொள்வதற்கு பெரும்பாலும் தேங்காய் எண்ணெய்யையே பலரும் பயன்படுத்துவதால் கூடுதல் வாய்ப்பு கிடைக்கிறது.

மைனஸ்!

மூலப் பொருளான தேங்காய் விலையைப் பொறுத்தே இதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தேங்காய் விலை அதிகரிக்கும்போது, மூலப் பொருள் கொள்முதல் விலையும் அதிகரிக்கும். இதனால் தேங்காய் எண்ணெய் விலை உயரும்போது விற்பனை பாதிப்படையும்.இந்த தொழிலின் சூட்சுமங்களை அனுபவ ரீதியாகப் பெற்ற பிறகு தனியாகத் தொடங்கி நடத்தினால் நிச்சயம் வெற்றிதான்!

வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி!

Thursday, 6 March 2014

தங்களை பற்றி சொல்ல, தங்களுக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள, செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல, நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டுசெல்ல மற்றும் பணம் சம்பாதிக்க என்று பலரும் பலவிதமாக வெப்சைட்டுகளை அமைத்து பராமரித்து வருகின்றனர். மக்கள் இப்போது போன் மற்றும் டிவியை விட இன்டர்நெட்டை அதிகம் உபயோகப்படுத்த ஆரம்பித்து விட்டனர் என்பதே இதற்கு காரணம். ஏனென்றால் நீங்கள் தேடும் மற்றும் எதிர்பார்க்கும் அனைத்தும் இன்டர்நெட்டில் சில நொடிகளில் கிடைக்கிறது. உதாரணமாக இப்போது கிரிக்கெட் நடந்து கொண்டு இருக்கிறது. உங்கள் டிவியில் அந்த சானல் வரவில்லை என்றால் அந்த போட்டியை உங்களால் காண இயலாது. ஆனால் இன்டர்நெட்டில் அப்படியில்லை, அந்த போட்டியை நீங்கள் நேரடியாக அதுவும் இலவசமாக கண்டுகளிக்கலாம்.டிவி ஒளிபரப்புகள் மட்டும் இன்டர்நெட் வளர காரணமல்ல. மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கவும், வேண்டாத பொருட்களை விற்கவும், ஒரு செய்தியை தெரிந்து கொள்ளவும் மற்றும் பலவற்றையும் அமர்ந்த இடத்திலேயே இன்டர்நெட் மூலம் பெற்று விடுவதால்தான் இந்த வளர்ச்சி. அதனால்தான் அனைவரும் தங்களுக்கென்று ஆளாளுக்கு வெப்சைட் ஆரம்பித்து வருகிறார்கள்.


நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தொழில் மட்டுமில்லைங்க உங்களின் சாதனைகள், உங்கள் ஊரில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றியும் உலகத்தாருக்கு தெரியப்படுத்த ஒரு கருவியாகவும் உபயோகப்படுத்தலாம். வெப்சைட்டை பற்றி இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இந்த பக்கம் பத்தாது, இன்னும் நூறு பக்கங்கள் எழுதவேண்டும்.

உங்களுக்காகவோ அல்லது உங்களின் நண்பர்களுக்காகவோ வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 07305847197


மானியம் வழங்கப்படும் தொழில்கள்!

1. மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி
2. தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு
3. கன உதிரிபாகங்கள் தயாரிப்பு
4. மருந்துப் பொருட்கள் உற்பத்தி
5. சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி
6. ஏற்றுமதி ஆபரணங்கள்
7. மாசுகட்டுப்பாடு உபகரணங்கள்
8. விளையாட்டுப் பொருட்கள்
9. சிக்கன கட்டுமானப் பொருட்கள்
10. ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவைகள்

சரி, அரசு வழங்கும் சலுகைகள் என்னென்ன?

15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. 36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது. சிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில் தெலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு (வாட்) ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது. உற்பத்தித் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைந்தபட்சம் 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்தவும் நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து சதவீதம் அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை வேலை வாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் தொடங்கி சலுகைகள் பெற பின்தங்கிய வட்டங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. 1971ம் ஆண்டு சிப்காட் என்ற சிறு தொழில் மையம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவட்டங்களில் 19 தொழில் மையங்கள் நிறுவப்பட்டு 1803 தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவைகள் எவை என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம். 

தக்காளி சூப் மிக்ஸ் தயாரிக்கும் முறை

Saturday, 1 March 2014

முழுவதுமாக பழுத்த கெட்டியான தக்காளிப் பழங்களை குழாயில் ஓடும் தண்ணீரில் நன்றாகக் கழுவவும். பின் இதனை சிறு துண்டுகளாக  வெட்டி தனி அறை உலர்த்தியில் 80 0 செல்சியஸில் 10 மணி நேரம் உலர்த்த வேண்டும். நீர் நீக்கம் செய்யப்பட்ட துண்டுகளை மின் அம்மியில் அரைத்து பொடியாக்க வேண்டும்
.
தக்காளி சூப் மிக்ஸ் தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள்
அளவு
தக்காளிப் பொடி
5.0 கிராம்
வெங்காயப் பொடி
0.5 கிராம்
சோள மாவு
2.0 கிராம்
சீரகத் தூள்
0.5 கிராம்
மிளகுத் தூள்
0.3 கிராம்
உப்பு
1.5 கிராம்
அஜினமோட்டோ
0.5 கிராம்

செய்முறை:

அனைத்து தேவையான பொருட்களை நன்கு கலக்கி பாலித்தீன் பைகளில் மூட்டை கட்டவேண்டும்.

வெங்காயப் பொடியை தயாரிக்கும் முறை:
 
 பெரிய வெங்காயத்தை தேர்வு செய்து தோலை உறிக்கவும். பின் இதனை குழாயில் ஓடும் நீரில் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கவும். இதனை தனி அறை உலர்த்தியில் 60 0 செ 7 மணி நேரம் வரை வைத்து உலர்த்த வேண்டும். நீர் நீக்கம் செய்யப்பட்ட செதில்களை அரைத்து பொடியாக்கி பாலித்தீன் பைகளில் மூட்டைகட்டவும். 10 கிராம் செய்து வைத்திருந்த தக்காளி சூப் மிக்ஸை 150 மில்லி கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து நன்கு கிளறவும்.

கையுறை தயாரிப்பு தொழில்

Thursday, 27 February 2014

தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கையுறைகளுக்கு, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அதிக வரவேற்பு காணப்படுகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூர் பகுதியில், பனியன் துணிகளால் ஆன கையுறைகள் அதிக அளவில் தயாரிக்கப் டுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கையுறைகள், உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் தொழிற்சாலைகளில் பனியன் செய்தது போக, கழிவு பனியன் துணிகளை கொண்டு சுற்றுவட்டார பகுதியில் உள்ள குறு தொழிற்சாலைகளில் கையுறைகள் செய்யப்படுகின்றன.

இவற்றை ஓசூர் மற்றும் பெங்களூரிலுள்ள மருந்து, கைகடிகாரம் உள்ளிட்ட பல தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
ஒரு நாளைக்கு ஒருவர் ஒரு கையுறையை பயன்படுத்துவதால், நாள் தோறும் ஆயிரக்கணக்கான கையுறைகள் தேவைப்படுகின்றன.

இந்தப் பகுதியில் இருந்து மட்டும் மாதத்துக்கு, இரண்டு லட்சம் கையுறைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மாதத்துக்கு, 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான கையுறைகள் பலதரப்பட்ட தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கையுறைக்கு ஓசூர் மட்டுமன்றி, பெங்களூரு, புனே உள்ளிட்ட தொழிற் நகரங்களில் வரவேற்பு உள்ளதால், நாளுக்கு நாள் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது. சிறப்பான ஏற்றுமதிக்கு வாய்ப்பும் உள்ளது.

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்

Friday, 21 February 2014

 ”வீட்லதான் சும்மா இருக்கேன்” என்று அங்கலாப்பவர்கள்தான் பலபேர்.  தங்களுக்குள் இருக்கும் திறமைகளையும், ஆர்வத்தையும் சற்று அலசி யோசித்தாலே சும்மா இருக்கும் நேரத்தில் பயனுள்ள வழிகளில் பணம் சம்பாதிக்க முடியும்.  அப்படி வீட்டில் இருந்த படியே செய்யச்சிறந்த பத்து தொழில்கள் பற்றிப் பார்க்கலாம்.

1. உணவு உபசரிப்பு

உங்கள் சமையல் கை ருசி பாராட்டப்படுகிறதா... யோசிக்காமல் இந்த உணவு உபசரிப்பில் இறங்கிவிடுங்கள்.  அருகில் பாச்சிலர் மேன்ஷனோ, லேடீஸ் ஆஸ்ட்லோ இருந்தால்.. வீட்டில் இருந்தபடியே அவர்களுக்கு உணவு செய்து தந்து லாபம் பெறலாம்.  பின்னே... உணவை விரும்பாதவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்ன?

2,புகைப்படமெடுத்தல்புகைப்படமெடுத்தல் சிலருக்கு ஆர்வமாக இருக்கும், இன்னும் சிலருக்கு ஹாபியாக இருக்கலாம், ஆனால் இதை ஒரு தொழிலாகவும் எடுத்துக் கொள்ள தகுதியானதே..  சரியான கருவியும், புகைப்படம் மற்றும் அந்தக் கருவி குறித்த செயல்பாடுகள் பற்றிய சில அடிப்படைகளை தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.  இந்தக்கலையில் பெயரெடுத்தவிட்டால், உங்களுக்கு ஆஃபர்கள் வந்துகொண்டே இருக்கும்,

3,செல்லப் பிராணிகள் ஸ்டோர்ஸ்

ஏற்றத்தாழ்வு இல்லாமல் பலரும் செல்லப்பிரானிகள் வளர்க்கிறார்கள்.  இதுதான் சூட்சும்ம்.  செல்லப்பிரானிகளுக்குத்  தேவையான உணவு,மருந்து, ஷாம்பு... என அனைத்தையும் வாங்கி வைத்து வியாபாரம் செய்யலாம். அருகில் உள்ள வெட்டினரி ஆஸ்பத்திரியுடன் ஒரு டை அப் வைத்துக் கொண்டீர்களானால் பிசினஸ் வெகு சீக்கிரம் பிரபலமாகிவிடும்.  பிராணிகள் வளர்ப்பவர்கள் மட்டுமல்ல பிராணிகளும் பழக்கமாகிவிடும்

4,திருமண வடிவமைப்பு


மாப்பிள்ளை அழைப்பில் இருந்து, கட்டுசாதக்கூடை வரையான திருமணத்திற்கான சகல வேலைகளைகளையும் வடிவமைத்து நிகழ்த்திக்காட்டுவது,  இது ஆண்களுக்கு மட்டுமே ஆனது என்றகாலம் மலையேறிவிட்டது,  புதுமையும், வேகமும், செயல்திறனும், நல்லுறவும் இருந்தால் போதுமானது,  ஒரு ஃபங்ஷன் முடித்துக்கொடுத்தால் லாபம் லட்சங்களில் நிற்கும்.


5,வெப் பேஸ்டு வணிகம்

கம்ப்யூட்டரின் உதவியோடு வெப் சார்ந்த விஷயங்களில், வெப் டிசைனராகவோ, வெப் டெவலப்பராகவோ தொழில் துவங்கலாம்.  கம்ப்யூட்டர், இண்டர்நெட், ஸ்கேனர், பிரன்டர் என கட்டமைப்பிற்கு சில ஆயிரங்கள் தேவைப்படும்.  அதை விட முக்கியமாகத் தேவைப்படுவது, விடா முயற்சியுடன் கூடிய ஆர்வம் தான்.  எல்லாம் கூடி வந்தால் உங்கள் பிசினஸ் ஜெட் வேகத்தில் பயணிக்கும் இந்த வணிகத்தில்

6,தோட்டம்

பூக்கள் மீதும், புற்கள் மீதும் ஒரே அளவு பாசம் கொண்டவர்களும், செடி கொடிகள் மீது விருப்பம் கொண்டவர்களும், வீட்டிலேயே தோட்டம் போடலாம், அதோடு அதை பிசினஸாகவும் மாற்றலாம்.  சிறு செடிகளை பதியம் போட்டு, நாற்றுகளாக்கி நர்சரி போல் அமைத்து விற்பனை செய்யலாம். ஹார்டிகல்சர் தெரிந்திருந்தால் பக்கத்து அலுவலகங்களில் அவுட் சோர்ஸ் முறையில் அவர்களது தோட்டத்தை பராமறித்தும் பணம் பார்க்கலாம். மணம் வீசும் தொழில் என்பது இதுதான்.

7,ஆன்லைன் வர்த்தகம்

தனிமைப்பிரியர்களுக்கு மிகவும் ஏற்ற துறை இந்த ஆன்லைன் வர்த்தகம்.  பங்குச்சந்தை பற்றியும் அதன் போக்கு குறித்தும் அலசுபவர்களுக்கு ஏற்ற துறை.  வீட்டில் ஒரு கம்ப்யூட்டரும், வங்கியில் பணமும் இருந்து, ஆன்லைன் வர்த்தகம் குறித்து சிறிது அறிவும் இருந்தால், நீங்கள் தான் எஜமானர்.  ஜமாக்கலாம்.

8,ரியல் எஸ்டேட் கன்சல்டன்சி


மேலே சொன்னவகையருக்கு நேர் எதிரானது இந்தத்துறை.  அலைய அஞ்சாதவர்களுக்கும், எந்த ஏரியாவில் நிலத்தின் மதிப்பு உயரும் என்பதை கணிக்கத் தெரிந்தவர்களுக்கும் இது பணம்தரும் சுரங்கமான தொழில். வீட்டு வாடகை- போக்கியம்- விற்பனை முதலியவற்றிக்கு கையை காட்டிவிடுவதிலேயே  பெர்சன்டேஜ் கமிஷன் பணம்பெறலாம்.

9,மார்க்கெட்டிங் கன்சல்டன்சி


ஏதேனும் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து பல ஆண்டுகள் பணி புரிந்திருந்து, தற்போது வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த மார்க்கெட்டிங் கன்சல்டன்சி மிகவும் ஏற்றது.  முதுலில் தெரிந்தவர்களிடமிருந்து துவங்கி, உங்களது ஆலோசனைகளை தொடரலாம். உங்களுக்கு ஆர்வமும் பேச்சுத்திறனும் இருப்பின் இதில் பெரிதாய் வளர முடியும்.

10,ஆட்டோமோடீவ் பாகங்கள்


இன்றைக்கு கார் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கார் வைத்திருப்போருக்கும் மோட்டார் கார் குறித்து முழுமையாகத் தெரியாது, இந்நிலையில் கார் பாகங்கள் பற்றியும் அதன் உதிரிபாகங்களின் சிறு டீலர்ஷிப் எடுக்கலாம்.  இந்த மார்க்கெட்டிங் துறை தயாரிப்பாளருக்கும் பயனாளிக்கும் பாலமாக இருப்பதோடு, உத்தரவாதமான லாபத்தை தரக்கூடியதுமாகும்.
    
 -உங்கள் சாய்ஸ் எதுவாக இருந்தாலும், ஆர்வமும், திட்டமிடுதலும் இருந்தால் நிச்சயம் பிசினஸ் சக்சஸாகவே இருக்கும்

கோழி பண்ணை - கோடிகளில் பணம் - எளிதாய் சம்பாதிக்க

Tuesday, 11 February 2014

சத்துக்களை அள்ளித் தரும் ஆரோக்கியமான உணவு முட்டை.  மாணவர்கள் சத்துணவிலும் வழங்கப்படுகிறது. கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் கூட, மஞ்சள் கருவை தவிர்த்துவிட்டு வெள்ளைக் கருவை சாப்பிடலாம். தேவை அதிகம் இருப்பதால், கோழிப்பண்ணை அமைத்து முட்டை உற்பத்தி செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வேப்பங்கொட்டை பாளையத்தில் கிருத்திகா கோழி பண்ணை நடத்தி வரும் வெங்கடாசலம். அவர் கூறியதாவது:

நான் ஒரு விவசாயி. பாசன நீர் பற்றாக்குறை காரணமாக முட்டைக்கோழி வளர்ப்பை பிரதான தொழிலாக செய்து வருகிறேன். இதற்கு  வங்கிக் கடன் உதவி எளிதாக கிடைப்பதால், பண்ணை அமைத்து கூண்டு முறையில் 24 ஆயிரம் கோழிகளை வளர்க்கிறேன். கோழி வளர்ப்பில் முதல் வளர்பருவம் வரை உற்பத்தி செலவுக்கு முதலீடு இருந்தால் போதும். முட்டைப்பருவ காலத்தில்  கிடைக்கும் முட்டைகளை விற்று  அதன்மூலம், அடுத்தடுத்த உற்பத்தி செலவுகளை சமாளிக்கலாம். அரவை இயந்திரம் வாங்கி தீவனத்தை நாமே அரைத்து கொண்டால் செலவு மிச்சமாகும். தீவனத்துக்கு தேவையான தானியங்கள் விலை குறையும்போது வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளலாம்.

நாமக்கல், பல்லடம் ஆகிய இடங்களில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு உள்ளது. இங்கு திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் மொத்த முட்டை கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. வியாபாரிகள் நேரில் வாங்கி செல்கின்றனர். சில நேரங்களில் நல்ல லாபமும், சில நேரங்களில் குறைந்த லாபமும் கிடைக்கும். முறையாக வளர்த்தால், கோழி இறப்பு, முட்டை உற்பத்தி குறைவு ஆகியவற்றை தவிர்க்கலாம். ஒரு கோழி வாரத்தில் 6 நாள் முட்டை இடுவதால், தினசரி நல்ல வருவாய் பார்க்கலாம்.வெளிநாடுகளுக்கு சிலர் மட்டுமே ஏற்றுமதி செய்கிறார்கள். முட்டைகளை தரப்பரிசோதனை செய்து தகுதியான முட்டைகளை அனுப்பினால் ஏற்றுமதியிலும் ஜொலிக்கலாம். கோழிப்பண்ணைகளுக்கு மின் கட்டணம் வணிக கட்டண பிரிவின் கீழ் விதிக்கப்படுகிறது. கோழி வளர்ப்பை மேம்படுத்த பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரி வருகிறோம்.

எப்படி வளர்ப்பது?

முட்டைக்கோழிகளை வளர்க்க ஆழ்கூளம், கூண்டு வளர்ப்பு என 2 முறைகள் உள்ளன. கூண்டுகளில் வளர்ப்பதே சிறந்தது. குஞ்சு பொரித்தது முதல் 8 வாரம் வரை குஞ்சு பருவம். அதற்கடுத்த 8 வாரங்கள் வளர் பருவம், பின்னர் 56 வாரங்கள் முட்டை உற்பத்தி பருவம். 3 பருவ கோழிகளையும் தனித்தனி கூண்டுகளில் வளர்க்க வேண்டும். கூண்டுகளில் கோழிகளின் பருவத்துக்கு ஏற்ப வெப்பம், காற்றோட்டம், ஈரப்பதம் இருக்குமாறு வசதி ஏற்படுத்த வேண்டும். குஞ்சு பருவத்தில் தீவனம் வீணாவதை தடுக்கவும், ஒன்றையொன்று கொத்திக் கொள்ளாமல் இருக்கவும் அதன் அலகுகளை 7 முதல் 10 நாட்களுக்குள் வெட்ட வேண்டும்.

குஞ்சு பருவத்தில் நோய் எதிர்ப்பு சக்திக்கு சுத்தமான தண்ணீரில் வைட்டமின் கே, சி மற்றும் சோடியம் சாலிசிலேட் கலந்து கொடுக்க வேண்டும். தடுப்பூசிகள் போட வேண்டும். சோயா, கம்பு, மக்காச்சோளம், கருவாடு, கிளிஞ்சல்கள் ஆகியவற்றுடன் நுண்ணூட்ட சத்துகள் நிறைந்த கலவை தீவனம் கொடுக்க வேண்டும். குஞ்சுப்பருவத்தில் குருணை தீவனம் கொடுப்பது எடையை அதிகரிக்கும்.

600 கிராம் எடையுடன் இருக்கும். குஞ்சு, வளர் பருவத்தில் 1100 கிராம் எடையை அடையும். முறையாக பராமரித்தால் 60 கிராம் எடையுள்ள முட்டைகளை கோழி இடும். ஒரு கோழி வாரத்துக்கு 6 முட்டை இடும். அதை விற்பனைக்கு அன்றன்றே அனுப்பிவிட வேண்டும்.

ஆலோசனை பெறலாம்!

கால்நடை பராமரிப்பு துறையின் மாவட்ட கால்நடை வளர்ப்பு மற்றும் ஆராய்ச்சி மையங்களில் முட்டைகோழி வளர்ப்பு தொடர்பான அறிவுரைகள், ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் அளிக்கின்றனர். முட்டை கோழிக் குஞ்சுகள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களின் தலைமை இடங்கள் நாமக்கல், பல்லடம், பொங்கலூர் ஆகிய இடங்களில் உள்ளது. இவற்றின் கிளைகள் முக்கிய நகரங்களில் உள்ளன. அங்கு கோழிக் குஞ்சுகளை வாங்கலாம். அங்கு கோழித் தீவன உற்பத்தியாளர்கள், கூண்டு தயாரிப்பவர்கள் மற்றும் கோழி வளர்ப்பு குறித்த விவரங்களை அளிக்கின்றனர்.

கட்டமைப்பு வசதிகள்

கூண்டு முறையில் முட்டைக் கோழி வளர்க்க 42க்கு 30 அடி நீள, அகலமுள்ள 3 கட்டிடங்கள் தேவை. இவற்றில் தலா 2 ஆயிரம் கோழி வீதம் 6 ஆயிரம் கோழி வளர்க்கலாம். கட்டிடத்துக்கு மொத்தம் ரூ.4.5 லட்சம் செலவாகும். 3 கட்டிடத்துக்கும் கூண்டு அமைக்க தலா ரூ.30 ஆயிரம் வீதம், ரூ.90 ஆயிரம் செலவாகும். கட்டிடத்தில் 3 அடுக்குகளை கொண்ட 6 இரும்பு கூண்டுகள் பொருத்த வேண்டும். மொத்தம் 18 அடுக்குகள் அமையும். 2 ஆயிரம் கோழிகள் இடம்பெறும். தீவனம் இருப்பு வைக்கவும், முட்டைகளை அடுக்கவும் தனித்தனி அறைகள் அமைக்க வேண்டும். கட்டமைப்புக்கு மொத்தம் ரூ.5.4 லட்சம்.

உற்பத்தி செலவு

குஞ்சு விலை சராசரி ரூ.21 வீதம் 2 ஆயிரம் குஞ்சுகள் ரூ.42 ஆயிரம். தீவனம் ஒரு கோழிக்கு 50 கிலோ தேவை. தீவனம் கிலோ விலை ரூ.15. 2 ஆயிரம் கோழிக்கு ரூ.15 லட்சம். தடுப்பு மருந்து உள்ளிட்ட பராமரிப்பு செலவுகள் ரூ.10 வீதம் ரூ.20 ஆயிரம். ஒரு வேலையாளுக்கு தினசரி ரூ.350 வீதம் ரூ.89 ஆயிரம் சம்பளம். மின் கட்டணம் ரூ.13 ஆயிரம் என உற்பத்தி செலவுக்கு மொத்தம் ரூ.16.64 லட்சம் தேவை.   

வருவாய் எவ்வளவு?

ஒவ்வொரு கோழியும் வளர்ந்த 17வது வாரத்தில் இருந்து 72வது வாரம் வரை முட்டை இடும். முட்டையிடும் பருவமான 55 வாரங்களில் (385 நாட்களில்) 320 முட்டைகள் இடும். முட்டை சராசரி விலை ரூ.2.50. 2 ஆயிரம் கோழிகள் மூலம் முட்டை விற்பனை வருவாய் ரூ.16 லட்சம். 72 வார முடிவில் வயதான முட்டை கோழிகள் விற்பனை 2 ஆயிரம் கோழிகள்(3500 கிலோ எடை) கிலோ ரூ.50 வீதம் வருவாய் ரூ.1.75 லட்சம். கோழி எரு தலா 15 கிலோ வீதம் 2 ஆயிரம் கோழிகள் மூலம் 30 டன் கிடைக்கும். இதன் மூலம் ரூ.24 ஆயிரம் வருவாய். மொத்த வருவாய் ரூ.17.99 லட்சம். லாபம் ரூ.1.35 லட்சம். முட்டை, எரு, கோழி விலை கூடினால் லாபமும் அதிகரிக்கும்.

சந்தை வாய்ப்பு!

தமிழகத்தில் முட்டை உற்பத்தி பெரும்பகுதி நாமக்கல்லிலும், ஓரளவு கோவை, திருப்பூர் மாவட்டத்திலும் உள்ளது. பரவலாக முட்டை உற்பத்தி மேற்கொண்டால் அந்தந்த பகுதிக்குரிய தேவையை பூர்த்தி செய்யலாம். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். முட்டை கோழி எரு ரசாயன உரத்துக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. ரப்பர், தேயிலை தோட்டங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. கோழி எருவை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். முட்டை பருவம் முடிந்த கோழிகளை வியாபாரிகளிடம் விற்கலாம்.

நிறுவன அறிமுகம்

நிறுவன அறிமுகம்

Popular Posts

Loading...
 

© Copyright தொழில் உலகம் 2010 -2011 | Design by Infotech Solutions | Published by Infotech Solutions Templates | Powered by Tamil Ulagam.